ரசிகர்களின் கண்ணீர் மல்க விடைபெற்றுச் சென்ற கறுப்பு முத்து: பீலேயின் உடல் நல்லட்டக்கம் செய்யப்பட்டது!
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பீலேவின் உடல் ரசிகர்களின் கண்ணீர் மல்க இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் கால்பந்து வீரர் பீலே. கடந்த 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி டிரெசு கோரகோயெசு என்ற பகுதியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். கடந்த 1957 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி மரக்கானா நாட்டில் நடந்த அர்ஜெண்டினாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் பிரேசில் 2-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. இந்த போட்டியில் பீலே முதல் முறையாக கோல் அடித்தார். அப்போது அவருக்கு வயது 16.
கால்பந்து போட்டியை அமெரிக்காவில் பிரபலப்படுத்திய பெருமை இவரையே சேரும். உலக அமைதிக்கான பரிசும் பெற்றுள்ளார். பீலேயின் 22 ஆண்டுகள் கால்பந்து வரலாற்றில் மொத்தமாக 1282 கோல்கள் வரையில் அடித்துள்ளார். ஒரே போட்டியில் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் கோல்கள் போடுவதிலும் உலக சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 92 முறை ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த வீரராக கருதப்படும் பீலே கருப்பு முத்து என்று அழைக்கப்படுகிறார்.
92 முறை ஹாட்ரிக் கோல் அடித்து உலக சாதனை படைத்தவர் பீலே!
கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 82. இதையடுத்து அவரது உடல் சாண்டோஸ் நகரின் விலா பெல்மிரோ விளையாட்டரங்கில் வைக்கப்பட்டது. ரசிகர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பீலே உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஷிவம் மாவி 4 விக்கெட்: கடைசில சொதப்பியும் காப்பாத்திக் கொடுத்த அக்ஷர்: இந்தியா த்ரில் வெற்றி!
இதையடுத்து, அங்கிருந்து பீலேயின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாண்டோஸில் உள்ள நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஷிவம் மாவி!