Asianet News TamilAsianet News Tamil

அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஷிவம் மாவி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகமான ஷிவன் மாவி தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.
 

T20 Debutant Shivam Mavi takes his first wicket against Sri Lanka first T20 Match
Author
First Published Jan 3, 2023, 10:11 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் வெளியேற சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வாங்கடே மைதானத்தில் நடந்த கடைசி 7 டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்த 2 அணி எது தெரியுமா?

இதையடுத்து இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக ரன்கள் சேர்த்தார். ஒருபுறம் அதிரடி காட்டிய இஷான் கிஷான் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். இவர், முதல் ஓவரிலேயே 16 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஹர்திக் பாண்டியாவும் 29 ரன்களில் வெளியேற இறுதியாக தீபம் கூடா மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரும் 36 பந்துகளில் 60 ரன்களுக்கு மேல் குவித்தனர்.

சிக்சரா விளாசிய இஷான் கிஷான், அக்‌ஷர் படேல், தீபக் கூடா: இந்தியா 162 ரன்கள் குவிப்பு!

இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் 2ஆவது பந்தில் நிசாங்கா கொடுத்த எளிதான கேட்சை டைவ் அடித்து பிடித்த சஞ்சு சாம்சன் கீழே விழும் போது பந்தையும் சேர்த்து நழுவ விட்டார். இதைத் தொடர்ந்து 2ஆவது ஓவரை அறிமுக வீரர் ஷிவம் மாவி வீசினார். இவரது 2ஆவது மற்றும் 3ஆவது பந்தில் பவுண்டரி போக, 5ஆவது பந்தில் நிசாங்கா கிளீன் போல்டானார்.

First T20: முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்!

தனது அறிமுக போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலே விக்கெட் எடுத்துக் கொடுத்து தான் ஒரு சிறந்த பவுலர் என்பதை ஷிவன் மாவி நிரூபித்துள்ளார். இதே போன்று 4ஆவது ஓவரில் 3.5 ஆவது பந்தில் தனஞ்ஜெயா அடித்த பந்தை, சஞ்சு சாம்சன் கேட்ச் பிடித்தார். இதன் மூலம் முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது வரை 2 ஓவர்கள் வீசிய ஷிவம் மாவி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 

First T20: முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்!

உம்ரான் மாலிக் வீசிய 8ஆவது ஓவரில் 7.5 ஆவது பந்தில் சரித் அசலாங்கா ஆஃப் டைடு கவர் திசையில் அடிக்க, அங்கு பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த ஹர்ஷல் படேல் அந்தப் பந்தை எளிதாக கேட்ச் பிடித்திருப்பார். ஆனால், விக்கெட் கீப்பராக இருந்த இஷான் கிஷான் வேகமாக ஓடிச் சென்று அந்தப் பந்தை கேட்ச் பிடித்துள்ளார். இதனை வேடிக்கைப் பார்த்த ஹர்திக் பாண்டியா சிரித்தார். ஹர்ஷல் படேல் வீசிய 9ஆவது ஓவரில் 8.2 ஆவது பந்தில் குசல் மெந்திஸ் ஆஃப் சைடு பக்கமாக பந்தை அடிக்க, அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த சஞ்சு சாம்சன் எளிதாக கேட்ச் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: திரும்ப வந்த பும்ரா: இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்!

இதே போன்று ஹர்ஷல் படேல் வீசிய 11ஆவது ஓவரின் 10.4 ஆவது பந்தில் பானுகா ராஜபக்‌ஷே ஆஃப் சைடில் ஸ்ட்ரைட்டாக அடிக்க அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடிக்கும் போது அவரது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, சிகிச்சை எடுக்க அவர் வெளியே சென்றார். அதன் பிறகு துணை கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios