Asianet News TamilAsianet News Tamil

ஷிவம் மாவி 4 விக்கெட்: கடைசில சொதப்பியும் காப்பாத்திக் கொடுத்த அக்‌ஷர்: இந்தியா த்ரில் வெற்றி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

India Won by 2 runs difference against Sri Lanka First T20 Match in Mumbai Wankhede Stadium
Author
First Published Jan 3, 2023, 11:07 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பௌலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் வெளியேற சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஷிவம் மாவி!

இதையடுத்து இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக ரன்கள் சேர்த்தார். ஒருபுறம் அதிரடி காட்டிய இஷான் கிஷான் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். இவர், முதல் ஓவரிலேயே 16 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஹர்திக் பாண்டியாவும் 29 ரன்களில் வெளியேற இறுதியாக தீபம் கூடா மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரும் 36 பந்துகளில் 60 ரன்களுக்கு மேல் குவித்தனர்.

சிக்சரா விளாசிய இஷான் கிஷான், அக்‌ஷர் படேல், தீபக் கூடா: இந்தியா 162 ரன்கள் குவிப்பு!

இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணி களமிறங்கியது. இதில், தொடக்க வீரர் நிசாங்கா, அறிமுக வீரர் ஷிவம் மாவி பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த வந்த தனஞ்ஜெயா 8 ரன்களில் வெளியேறினார். அசலங்கா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் குசல் மெந்திஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ராஜபக்‌சா 10 ரன்களிலும், தீக்‌ஷனா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் தசுன் ஷனாகா அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 45 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக் பந்தில் சகாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

First T20: முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்!

கடைசி 2 ஓவர்களில் இலங்கை அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை  ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் 2ஆவது பந்தில் நோ பால் உள்பட 2 ரன்களும், 3ஆவது பந்தில் வைடு, மறுபடியும் வீசப்பட்ட 3ஆவது பந்தில் 3 ரன்களும், 4 ஆவது பந்தில் சிக்சரும், 5ஆவது பந்தில் 1 ரன்னும், 6ஆவது பந்தில் 1 ரன்னும் என்று மொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக ஹர்திக் பாண்டியா வீசப்பட வேண்டிய ஓவர், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரால் வீச முடியாது. ஆகையால், சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை வைடாக வீசினார். 2ஆவது பந்தில் 1 ரன்னும், 3ஆவது பந்தில் 6 (சிக்ஸ்) ரன்னும் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தில் ரஜிதா ரன் அவுட்டானார். இறுதியாக கடைசி 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இந்தப் பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: திரும்ப வந்த பும்ரா: இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்!

இந்திய அணி தரப்பில் பௌலிங்கில் அறிமுக போட்டியிலேயே ஷிவம் மாவி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி வரும் 5ஆம் தேதி புனே மைதானத்தில் நடக்கிறது.
 

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் தொடர்ந்து 11ஆவது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. அறிமுக போட்டியிலேயே பந்து வீச்சில் கலக்கிய ஷிவம் மவி 4 ஓவர்கள் வீசி 14 டாட் பால் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி 22 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios