Asianet News TamilAsianet News Tamil

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி இவ்வளவு மிஸ்டேக் செய்திருக்கா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பல்வேறு தவறுகளை செய்தும், இறுதியாக 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

India did so many mistakes against Sri Lanka 1st T20 Match
Author
First Published Jan 4, 2023, 2:05 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. நேற்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. அதன்படி இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.

முதல் தவறு:

அறிமுக போட்டியிலேயே 7 ரன்களில் ஆட்டமிழந்து சுப்மன் கில் வெளியேறினார். அதுவும் சுழற்பந்துக்கு ஷாட் பிட்ச் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமின்றி ஒரு ரெவியூவையும் வீண் ஆக்கினார்.

கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக 155 கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்!

2ஆவது தவறு:

இலங்கைக்கு எதிரான டி20 அணியின் துணை கேப்டனும், மிஸ்டர் 360 என்று அழைக்கப்படுபவருமான சூர்யகுமார் யாதவ் வந்த உடனே தலைகீழாக தான் அடிப்பேன் என்று அடித்து எளிதில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

3ஆவது தவறு:

சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தான் சரியாக ஆடவில்லை என்றால், அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் சரிவர விளையாடவில்லை. முதலில் இவர் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்து கோட்டை விட்டார் அசலாங்கா. அதன் பிறகு மறுபடியும் அடித்து ஆட முயற்சித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக ஆட வேண்டும் என்ற பொறுப்பு இல்லை. அணியில் இடம் பெறுவது என்பது எவ்வளவு கஷ்டம் என்று சஞ்சு சாம்சனுக்கு தெரியவில்லை போல. 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். பேட்டிங்கில் தான் சரியில்லை என்றால் பீல்டிங்கிலும் கோட்டை விட்டார். போட்டியின் முதல் ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா வீசிய 2ஆவது பந்தில் நிசாங்கா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க டைவ் அடித்து கீழே விழும் போது அதனை கோட்டை விட்டார்.

மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்: ஆர்த்தோ மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டுமா?

4ஆவது தவறு:

இதே போன்று மற்றொரு முறை பவுண்டரி எல்லையில் வைத்து வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்து அதையும் கோட்டை விட்டார். இதே போன்று இக்கட்டான சூழலில் யுஸ்வேந்திர சகால் ஸ்கொயர் லைக் சைடில் நின்றிருந்த போது பந்தை கோட்டைவிட்டார். அந்த பந்தை பவுண்டரி எல்லைக்கு செல்ல ஷிவம் மாவி ஓடி வந்து பவுண்டரி தடுத்து நிறுத்தினார்.

5ஆவது தவறு:

கிரிக்கெட் விளையாடும் போது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஷிவம் மாவி வீசிய ஓவரில் ஹசரங்கா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க சென்று ஹர்திக் பாண்டியா காலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் வெளியில் சென்றார். 3 ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்டியா 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி ஒரு ஓவர் அவர் வீசவில்லை.

தோனியை பிசிசிஐக்கு பரிந்துரை செய்த முன்னாள் பெங்கால் வீரர் பிரகாஷ் போத்தார் காலமானார்!

6ஆவது தவறு:

ஹர்ஷல் படேல் வீசிய 19ஆவது ஓவர் தான். 2 ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் அந்த ஓவரில் மட்டும் வைடு, சிக்சர், நோ பால் என்று அள்ளி கொடுக்க அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

7ஆவது தவறு:

அக்‌ஷர் படேல்/ஹர்திக் பாண்டியா

கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா தான் வீச வேண்டியது. ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் பந்து வீச முடியவில்லை. ஆகையால், தான் அக்‌ஷர் படேல் பந்து வீசினார். 3 ஓவர்கள் வீசிய அக்‌ஷர் படேல் 31 ரன்கள் கொடுத்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. அது இல்லாமல் என்றால் 2 ஓவரில் 22 ரன்கள் கொடுத்தார். இப்படி வாரி கொடுத்த அக்‌ஷருக்கு கடைசி ஓவர் கொடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. எனினும், அவர் வைடு, சிக்சர் கொடுக்க அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ரசிகர்களின் கண்ணீர் மல்க விடைபெற்றுச் சென்ற கறுப்பு முத்து: பீலேயின் உடல் நல்லட்டக்கம் செய்யப்பட்டது!

Follow Us:
Download App:
  • android
  • ios