கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக 155 கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் உம்ரான் மாலிக் அவரது கடைசி ஓவரில் அதிகபட்சமாக 155 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் வெளியேற சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்: ஆர்த்தோ மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டுமா?
இஷான் கிஷான் 37 பந்துகளில் வெளியேற, ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார். தீபக் கூடா 23 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதே போன்று அக்ஷர் படேலும் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணியில் நிசாங்கா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
தோனியை பிசிசிஐக்கு பரிந்துரை செய்த முன்னாள் பெங்கால் வீரர் பிரகாஷ் போத்தார் காலமானார்!
தனஞ்ஜெயா 8 ரன்களில் வெளியேறினார். அசலங்கா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் குசல் மெந்திஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ராஜபக்சா 10 ரன்களிலும், தீக்ஷனா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் தசுன் ஷனாகா அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 45 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக் பந்தில் சகாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் 15 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இறுதியாக கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நேற்று 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மாலிக் தனது கடைசி ஓவரின் போது அதிகபட்சமாக 155 கிமீ வேகத்தில் பந்து வீசுயுள்ளார். அதுமட்டுமின்றி பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா அதிகபட்சமாக 153.36 கீமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். முகமது ஷமி 153.3 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.