அதிரடி ஆட்டம் காட்டிய ரியான் பராக்; தியோதர் டிராபியை கைப்பற்றிய தெற்கு மண்டலம்!
கிழக்கு மண்டல அணிக்கு எதிராக நடந்த தியோதர் டிராபியின் இறுதிப் போட்டியில் தெற்கு மண்டல அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் டிராபியை கைப்பற்றியது.
தியோதர் டிராபி தொடர் புதுச்சேரியில் நடந்தது. கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய இந்திய தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று புதுச்சேரியில் நடந்தது. இதில் தெற்கு மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோதின. இதில், தெற்கு மண்டல அணியின் கேப்டனான மாயங்க் அகர்வால் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய தெற்கு மண்டல அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது.
இந்திய அணிக்கு 5 சதவிகிதமும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவிகிதமும் அபராதம்!
இதில், குன்னுமால் 75 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 107 ரன்கள் எடுத்தார். கேப்டன் மாயங்க் அகர்வால் 83 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்தார். சாய் சுதர்சன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 54 ரன்கள் சேர்த்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய கிழக்கு மண்டல அணிக்கு தொடக்க வீரர் அபிமன்யு 1 ரன்னிலும், விராட் சிங் 6 ரன்னிலும் உத்கர்ஷ் சிங் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கிழக்கு மண்டல அணியின் கேப்டன் சவுரப் திவாரி 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சுதீப் குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த ரியான் பராக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய பராக் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக கிழக்கு மண்டல அணி 46.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக தெற்கு மண்டல அணி 9 ஆவது தியோதர் டிராபியை கைப்பற்றியது.
இது நாங்க தோற்க வேண்டிய போட்டி – ரோவ்மன் பவல்!