வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்கம் முதல் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், அறிமுக வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இது நாங்க தோற்க வேண்டிய போட்டி – ரோவ்மன் பவல்!
இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி வரும் 6ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில், தான் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக இந்திய அணிக்கு போட்டி சம்பளத்திலிருந்து 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
NCC Cadets: என்சிசி வீரர்களை தாக்கிய மாணவர் இடைநீக்கம்; வீடியோ வைரலான நிலையில் கல்லூரி நடவடிக்கை!
