Asianet News TamilAsianet News Tamil

RSA vs SL: உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா படைத்த சாதனைகளின் பட்டியல் – 100, 108, 106 ரன்கள்!

உலகக் கோப்பையில் 4ஆவது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்ததன் மூலமாக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது.

South Africas achievements in the 4th league match in Cricket World Cup 2023 against Sri Lanka at Arun Jaitley Stadium, Delhi rsk
Author
First Published Oct 7, 2023, 8:37 PM IST | Last Updated Oct 7, 2023, 8:37 PM IST

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரின் 3ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து அதிகபட்சமாக 428 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பை வரலற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது.

சரி, உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா படைத்த சாதனைகளின் பட்டியல் பார்க்கலாம்…

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிபட்சமாக 428 ரன்கள் குவித்து அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

South Africa vs Sri Lanka, Aiden Markram: உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் விளாசி சாதனை படைத்த மார்க்ரம்!

ஒருநாள் உலகக் கோப்பையில் அணிகளின் அதிகபட்ச ஸ்கோர்:

428/5 – தென் ஆப்பிரிக்கா vs இலங்கை, டெல்லி 2023*

417/6 - ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான், பெர்த் 2015

413/5 - இந்தியா vs பெர்முடா, போர்ட் ஆப் ஸ்பெயின் 2007

411/4 – தென் ஆப்பிரிக்கா vs அயர்லாந்து, கான்பெர்ரா 2015

408/5 – தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், சிட்னி, 2015

RSA vs SL, 3rd Match: உலகக் கோப்பை வரலாற்றில் முத்திரை பதித்த தென் ஆப்பிரிக்கா – 428 ரன்கள் குவித்து சாதனை!

ODI உலகக் கோப்பையில் அதிகமுறை 400க்கு மேல் அடித்த அணிகள்:

தென் ஆப்பிரிக்கா – 3

இந்தியா – 1

ஆஸ்திரேலியா – 1

ODIகளில் அதிகமுறை 400க்கு மேல் அடித்த அணிகள்

8 - தென் ஆப்பிரிக்கா

6 - இந்தியா

5 - இங்கிலாந்து

2 - ஆஸ்திரேலியா

2 – இலங்கை

Hangzhou Asian Games 2023: 4 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி – கபடியில் இந்திய அணிக்கு தங்கம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு அதிவேகமாக ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்தவர்கள்:

31 - ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், ஜோபர்க், 2015

44 - மார்க் பவுச்சர் vs ஜிம்பாப்வே, போட்செஃப்ஸ்ட்ரூம், 2006

49 - எய்டன் மார்க்ரம் vs இலங்கை, டெல்லி, 2023*

52 - ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், சிட்னி 2015

மழையால் போட்டி ரத்து – இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு – ஆண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு தங்கம்!

ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்காக 100 ரன்கள் அடித்த மூன்று வீரர்கள்:

தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், ஜோபர்க், 2015

தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, வான்கடே, 2015

இங்கிலாந்து vs நெதர்லாந்து, ஆம்ஸ்டெல்வீன், 2022

தென் ஆப்பிரிக்கா vs இலங்கை, டெல்லி 2023*

பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் முதல் தங்கம்: சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி!

ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேக சதம் (பந்துகள் மூலம்)

49 - எய்டன் மார்க்ரம் vs இலங்கை, டெல்லி, 2023

50 - கெவின் ஓ பிரையன் vs இங்கிலாந்து, பெங்களூரு, 2011

51 - கிளென் மேக்ஸ்வெல் vs இலங்கை, சிட்னி, 2015

52 - ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், சிட்னி 2015

உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் மூன்று வீரர்கள் 100 ரன்கள் எடுத்தது இதுவே முதல் முறையாகும். ஒருநாள் போட்டியில் ஒட்டுமொத்த 4ஆவது முறையாகும்.

IND vs AUS:உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஒருநாள் உலகக் கோப்பையில் 100 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர்:

107* - ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், டெல்லி 2011

134 - ஏபி டி வில்லியர்ஸ் vs நெதர்லாந்து, மொஹாலி 2011

100 - குயின்டன் டி காக் vs இலங்கை, டெல்லி 2023

WC போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக சதம் அடித்த இரண்டு வீரர்கள்:

ஹசீம் ஆம்லா (113) & ஏபி டி வில்லியர்ஸ் (134) vs நெதர்லாந்து, மொஹாலி 2011

ஜேபி டுமினி (115) & டேவிட் மில்லர் (138) vs ஜிம்பாப்வே, ஹாமில்டன், 2015

ஹசீம் ஆம்லா (159) & பாப் டு பிளெஸ்ஸிஸ் (109) vs அயர்லாந்து, கான்பெர்ரா, 2015

குயிண்டன் டி காக் (100) & ரஸி வான் டெர் டூசென் (108) vs இலங்கை, டெல்லி 2023*

உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக சதம் அடித்த சீனியர் வீரர்கள் (வயதில்):

34 வயது 358 நாட்கள் – பாப் டூ பிளெசிஸ் vs ஆஸ்திரேலியா, மான்செஸ்டர், 2019

34 வயது 242 நாட்கள்– ரஸி வான் டெர் டூசென் vs இலங்கை, டெல்லி, 2023*

31 வயது 337 நாட்கள் - ஹசீம் ஆம்லா vs அயர்லாந்து, கான்பெர்ரா, 2015

31 வயது 151 நாட்கள் – ஜாக் காலிஸ் vs நெதர்லாந்து, பாஸ்டெர்ரே, 2007

31 வயது 10 நாட்கள் – ஏபி டிவிலியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், சிட்னி, 2015

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios