South Africa vs Australia: இந்திய அணிக்கு சாதகமான சம்பவம் – தென் ஆப்பிரிக்காவை வச்சு செய்யும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ரன்கள் குவிக்க தடுமாறி வரும் நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் இந்திய அணி பழி தீர்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2ஆவது அரையிறுதிப் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, குயீண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் – பரபரப்பை கிளப்பி ரேகா போஜ்!
இதில், முதல் ஓவரிலேயே பவுமா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 14 வரையில் பிடித்து திணறிய டி காக் 3 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 31 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எய்டன் மார்க்ரம் 10 ரன்களில் வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்கா 12 ஓவர்கள் வரையில் 4 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் வரையில் எடுத்து தடுமாறியது. அதன் பிறகு டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் நிதானமாக விளையாடி 100 ரன்களை கடந்தனர். 5ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. இதில், கிளாசென் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த மார்கோ யான்சென் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறினார்.
மேக்ஸ்வெல், ஸ்டார்க்கை களமிறக்கிய ஆஸ்திரேலியா – இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா?
கெரால்டு கோட்ஸி ஓரளவு ரன்கள் சேர்த்தார். ஆனால், அவர் சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார். பந்து பேட்டிலும் படவில்லை, கிளவுஸிலும் படவில்லை. அவரது தோள்பட்டையில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. ஆஸி, வீரர்கள் அவுட் கேட்கவே நடுவரும் அவுட் கொடுத்தார். ஆனால் கோட்ஸி அப்பீல் செய்யவா என்று டேவிட் மில்லரிடம் கேட்டார். எனக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்று மில்லர் சைகை காட்டவே கோட்ஸி வெளியேறினார்.
இப்படி அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ஆட்டமிழக்கவே டேவிட் மில்லர் மட்டுமே கடைசி வரை நிலையாக நின்று சதம் அடித்து அணிக்கு கை கொடுத்தார். தென் ஆப்பிரிக்காவும் 200 ரன்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது.