Asianet News TamilAsianet News Tamil

உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் – பரபரப்பை கிளப்பி ரேகா போஜ்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Telugu Actress Rekha Boj Said That, I will run naked if India wins the World Cup 2023 rsk
Author
First Published Nov 16, 2023, 3:39 PM IST | Last Updated Nov 16, 2023, 3:39 PM IST

இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், இந்திய வீரர்களான விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி ஆகியோர் சாதனை படைத்தனர்.

மேக்ஸ்வெல், ஸ்டார்க்கை களமிறக்கிய ஆஸ்திரேலியா – இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா?

இதையடுத்து 2ஆவது அரையிறுதிப் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது வரையில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை பழி வாங்க காத்திருக்கும் டீம் இந்தியா, இது நடந்தால் மட்டுமே சாத்தியம்!

இதில், குயீண்டன் டி காக், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டூசென், எய்டன் மார்க்ரம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். கடந்த 2003 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மோதும். மேலும், இதில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை பழி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாவு பயத்தை காட்டிட்டாங்களே பரமா மூவ்மெண்ட் - ஷமி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு!

இந்த நிலையில் தான் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெலுங்கு நடிகை ரேகா போஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:  உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

சண்டே பிளாஸ்டுக்காக காத்திருக்க முடியாது – சூப்பர் 7 ஷமி, யு ஆர் தி மேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டு!

Telugu Actress Rekha Boj Said That, I will run naked if India wins the World Cup 2023 rsk

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios