20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை பழி வாங்க காத்திருக்கும் டீம் இந்தியா, இது நடந்தால் மட்டுமே சாத்தியம்!
2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை பழி தீர்த்துக் கொள்ள இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நேற்று நடந்தது.
சாவு பயத்தை காட்டிட்டாங்களே பரமா மூவ்மெண்ட் - ஷமி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு!
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 397 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக, 4 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை இந்தியா பழி தீர்த்துக் கொண்டது.
சண்டே பிளாஸ்டுக்காக காத்திருக்க முடியாது – சூப்பர் 7 ஷமி, யு ஆர் தி மேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டு!
இதே போன்று ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆம், இன்று நடக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மட்டுமே இது சாத்தியமாகும். எப்படி என்றால், கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்தது.
Babar Azam: டி20 கேப்டனாக ஷாகீன் அஃப்ரிடி, டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம்!
இதில், கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக விளையாடி 140 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேமியன் மார்ட்டின் 88 ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை. ஆடம் கில்கிறிஸ்ட் 57 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் ஹர்பஜன் சிங் மட்டுமே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் 4 ரன்னிலும், விரேந்திர சேவாக் 82 ரன்களில் ரன் அவுட்டில் வெளியேறினார்.
IND vs NZ: அருமையான பேட்டிங், நல்ல பந்து வீச்சு: இறுதிப் போட்டிக்கு வாழ்த்துக்கள் -பிரதமர் மோடி!
ராகுல் டிராவிட் 47 ரன்கள் எடுத்தார். கங்குலி, யுவராஜ் சிங் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக இந்திய அணியானது, 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இதே போன்று தென் ஆப்பிரிக்கா இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 5 முறை ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் சாம்பியனாகியுள்ளது. இந்தியா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால், தென் ஆப்பிரிக்கா ஒரு முறை கூட சாம்பியனாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
India vs New Zealand, Mohammed Shami: 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஷமி வரலாற்று சாதனை!