Babar Azam: டி20 கேப்டனாக ஷாகீன் அஃப்ரிடி, டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம்!
தனது கேப்டன் பதவியை பாபர் அசாம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டி20 கேப்டனாக ஷாகீன் அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பாகிஸ்தான் அணி 9 லீக் போட்டிகளில் விளையாடியது. பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதல் முறையாக இந்தியா வந்து விளையாடினார். பாகிஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.
IND vs NZ: அருமையான பேட்டிங், நல்ல பந்து வீச்சு: இறுதிப் போட்டிக்கு வாழ்த்துக்கள் -பிரதமர் மோடி!
கடைசியாக கிடைத்த அரையிறுதி வாய்ப்பையும் இழந்த பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் அனைத்து வடிவங்களிலிருந்தும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணியை வழிநடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்த தருணம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.
India vs New Zealand, Mohammed Shami: 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஷமி வரலாற்று சாதனை!
கடந்த 4 ஆண்டுகளில், களத்திற்கு உள்ளே, வெளியே நான் பல உயர்வையும் தாழ்வையும் அனுபவித்துள்ளேன், ஆனால் பாகிஸ்தானின் பெருமையையும் மரியாதையையும் நிலைநிறுத்துவதை முழு மனதுடன் ஆர்வத்துடன் நோக்கமாகக் கொண்டிருந்தேன். ஒயிட்-பால் வடிவத்தில் நம்பர் 1 இடத்தை அடைந்தது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் விளைவாகும், இந்த பயணத்தின் போது அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.
அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு, ஆனால் இது நான் ராஜினாமா செய்ய இது தான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். மூன்று வடிவங்களிலும் ஒரு வீரராக பாகிஸ்தானை நான் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் புதிய கேப்டன் மற்றும் அணிக்கு ஆதரவளிக்க நான் இங்கு வந்துள்ளேன். இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில், பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அஃப்ரிடி டி20 கேப்டனாகவும், ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டன்கள் நியமிக்கப்படவில்லை. ஷாகீன் அஃப்ரிடி, 52 டி20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 27 டெஸ்ட் போட்டிகளில் 105 விக்கெட்டுகளும், 51 ஒரு நாள் போட்டிகளில் 104 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று ஷான் மசூத், 30 டெஸ்ட் போட்டிகளில் 1597 ரன்களும், 19 டி20 போட்டிகளில் 395 ரன்களும், 9 ஒரு நாள் போட்டிகளில் 163 ரன்களும் எடுத்துள்ளார்.