சீகம் மதுரை பாந்தர்ஸ் ஃபர்ஸ்ட் வெற்றி: புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Siechem Madurai Panthers beat Salem Spartans by 7 wickets in TNPL 2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. சேலத்தில் நடந்த இந்தப் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

முதல் கோல் அடித்த மகேஷ் நௌரேம் சிங்: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

சேலம் ஸ்பார்டன்ஸ்:

எஸ் அபிஷேக், அபிஷேக் தன்வார் (கேப்டன்), ஆகாஷ் சும்ரா, அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), ஜே கௌரி சங்கர், ராஜேந்திரன் கார்த்திகேயன், கௌசிக் காந்தி, மான் பாஃப்னா, சச்சின் ரதி, சன்னி சந்து, முகமது அத்னான் கான்

சீகம் மதுரை பாந்தர்ஸ்:

எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிசாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், முருகன் அஸ்வின், சுரேஷ் லோகேஷ்வர், வாஷிங்டன் சுந்தர், பி சரவணன், குர்ஜாப்னீத் சிங், வி கௌதம்

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை ரெடி; ஜூன் 27ல் வெளியீடு!

இதில், தொடக்க வீரர் ஆகாஷ் சும்ரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கௌசிக் காந்தி 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த மான் பாஃப்னா 1 ரன்னிலும், எஸ் அபிஷேக் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிதானமாக ஆடிய அமித் சாத்விக் 17 ரன்களில் வெளியேறினார். கடைசியாக கேப்டன் அபிஷேக் தன்வார் 29 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது.

10 பவுண்டரி, 5 சிக்ஸர் – சதம் அடித்த கேப்டன் அருண் கார்த்திக்: நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!

பின்னர், 99 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியில் ஹரி நிசாந்த் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். வி ஆதித்யா 8 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ஸ்ரீ அபிஷேக் மற்றும் ஸ்வப்னில் சிங் இருவரும் நிலைத்து நின்றி ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர். இறுதியாக 13 ஓவர்களில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும், புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது.

சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜனுக்கு கையில் காயம்: கிரிக்கெட் மைதானம் திறந்த போது எதிர்பாராமல் நடந்த விபரீதம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios