ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை ரெடி; ஜூன் 27ல் வெளியீடு!
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா தவிர, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
10 பவுண்டரி, 5 சிக்ஸர் – சதம் அடித்த கேப்டன் அருண் கார்த்திக்: நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!
இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. 2 இடங்களுக்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடராஜனுக்கு கையில் காயம்: கிரிக்கெட் மைதானம் திறந்த போது எதிர்பாராமல் நடந்த விபரீதம்!
குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த இரு பிரிவுகளிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதில் மொத்தம் 20 போட்டிகள் நடக்கும். அதன் பிறகு இந்த இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். இதில், ஒவ்வொரு அணியும் விளையாடாத அணிகளுடன் போட்டியிடும். இதில் கடைசியாக இடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு போராடும். இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். உலகக் கோப்பையில் 2 அணிகளும் 9 மற்றும் 10வது இடத்தைப் பிடிக்கும்.
பாபா அபராஜித்தின் அதிரடியால் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 159 ரன்கள் குவிப்பு!
இந்த நிலையில், 13ஆவது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஐசிசி ஆண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு மும்பையில் வைத்து அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டவணை வெளியாகி 100 நாட்களுக்கு பிறகு உலகக் கோப்பை தொடர் நடக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்; வீடியோ காலில் விஜய் சங்கர்