10 பவுண்டரி, 5 சிக்ஸர் – சதம் அடித்த கேப்டன் அருண் கார்த்திக்: நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Nellai Royal Kings Beat Chepauk Super Gillies by 8 Wicket Difference in TNPL 2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போன்று சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

நடராஜனுக்கு கையில் காயம்: கிரிக்கெட் மைதானம் திறந்த போது எதிர்பாராமல் நடந்த விபரீதம்!

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:

பாபா அபராஜித் (கேப்டன்), எஸ் ஹரிஷ் குமார், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), லோகேஷ் ராஜ், எஸ் மதன் குமார், பிரதோஷ் ஃபால், ராஹில் ஷா, ராமலிங்கம் ரோகித், சஞ்சய் யாதவ், உதிரசாமி சசிதேவ், எம் சிலம்பரசன்

நெல்லை ராயல் கிங்ஸ்:

அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசாமி (விக்கெட் கீப்பர்), ரித்திக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி சுகேந்திரன், லக்‌ஷ்மேலா சூர்யபிரகாஷ், லக்‌ஷய் ஜெயின், என் எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, சந்தீப் வாரியர், எஸ் மோகன் பிரசாத்

பாபா அபராஜித்தின் அதிரடியால் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 159 ரன்கள் குவிப்பு!

தற்போது சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இதில், கேப்டன் பாபா அபராஜித் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் குவித்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்; வீடியோ காலில் விஜய் சங்கர்!

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சு தரப்பில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். லக்‌ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளும், மோகன் பிரசாத் மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடியது.

கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் ஸ்ரீ நிரஞ்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், நிரஞ்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்களில் வெளியேறினார். கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியாக 61 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

TNPL 2023: முதலிடம் பிடிக்குமா நெல்லை? டாஸ் வென்ற சேப்பாக்கம் பேட்டிங்!

கடைசியாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios