நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போன்று சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு: ஓரங்கட்டப்பட்ட சர்பராஸ் கான், ஹனுமா விஹாரி!

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:

பாபா அபாரஜித் (கேப்டன்), எஸ் ஹரிஷ் குமார், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), லோகேஷ் ராஜ், எஸ் மதன் குமார், பிரதோஷ் ஃபால், ராஹில் ஷா, ராமலிங்கம் ரோகித், சஞ்சய் யாதவ், உதிரசாமி சசிதேவ், எம் சிலம்பரசன்

நெல்லை ராயல் கிங்ஸ்:

அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசாமி (விக்கெட் கீப்பர்), ரித்திக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி சுகேந்திரன், லக்‌ஷ்மேலா சூர்யபிரகாஷ், லக்‌ஷய் ஜெயின், என் எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, சந்தீப் வாரியர், எஸ் மோகன் பிரசாத்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறும் ஜஸ்ப்ரித் பும்ரா!

இந்த நிலையில், நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் தொடரின் 14ஆவது போட்டி சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கிலிலீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கோலி ஆதரிக்கவில்லை என்றால் நான் திரும்ப வந்திருக்க முடியாது – யுவராஜ் சிங்!

அதன்படி தற்போது சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடி வருகிறது. தற்போது வரையில் 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், தொடக்க வீரர் பிரதோஷ் ஃபால் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் பாபா அபாரஜித் 15 ரன்களுடனும், ஜெகதீசன் 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.