குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்; வீடியோ காலில் விஜய் சங்கர்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் பிரபலங்களான வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.
பதினாறாவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் 5ஆவது முறையாக எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனானது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 404 ரன்கள் எடுத்தார்.
TNPL 2023: முதலிடம் பிடிக்குமா நெல்லை? டாஸ் வென்ற சேப்பாக்கம் பேட்டிங்!
இதே போன்று வருண் சக்கரவர்த்தி 14 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் சிறந்த பந்து வீச்சாக 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவர்களது வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் விஜய் சங்கர்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு: ஓரங்கட்டப்பட்ட சர்பராஸ் கான், ஹனுமா விஹாரி!
தற்போது நடந்து வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசனில் வருண் சக்கரவர்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிலும், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் விஜய் சங்கரும் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிக்கெட் டூ பினாளே வாரத்தின் இன்றைய எபிசோடில் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர். புகழின் மொபைலில் வீடியோ கால் மூலமாக விஜய் சங்கர் அனைவரிடமும் பேசி மகிழ்ந்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறும் ஜஸ்ப்ரித் பும்ரா!