முதல் கோல் அடித்த மகேஷ் நௌரேம் சிங்: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.Cri
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கேப்டன் சுனில் சேத்தரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து இன்று இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை ரெடி; ஜூன் 27ல் வெளியீடு!
இந்தப் போட்டி தொடங்கிய முதல் அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவே இல்லை. ஆகையால், முதல் அரைமணி நேரம் டிராவில் முடிந்தது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் முதல் அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 4 போட்டிகளில் கேப்டன் சுனில் சேத்தரி கோல் அடித்தார். ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அதன் பிறகு கேப்டன் சுனில் சேத்தரி ஒரு கோல் அடித்து கொடுக்க, இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இது சுனில் சேத்தரி அடித்த 91ஆவது கோல் ஆகும்.
10 பவுண்டரி, 5 சிக்ஸர் – சதம் அடித்த கேப்டன் அருண் கார்த்திக்: நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!
இதைத் தொடர்ந்து, மகேஷ் நௌரேம் சிங் தனது முதல் கோல் அடித்துக் கொடுக்க, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசியாகவும் இந்தியாவிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அதில் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா, நேபாள் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நடராஜனுக்கு கையில் காயம்: கிரிக்கெட் மைதானம் திறந்த போது எதிர்பாராமல் நடந்த விபரீதம்!