2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி முதல் வெற்றியுடன் தொடரை ஆரம்பித்துள்ளது. தொடக்க வீரர் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இன்று வங்கதேச அணியை எதிர்த்து ஆடிய இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இளம் வீரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

துபாயில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி 229 ரன்கள் இலக்கை சேஸ் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களைக் கடந்த ரோகித் 41 ரன்கள் எடுத்து அவுட்டானர். பின்னர் வந்த விராட் கோலி (22), ஷ்ரேயாஸ் ஐயர் (15), அக்சர் படேல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் கில் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். 5வது விக்கெட்டுக்குக் களமிறங்கிய கே.எல்.ராகுலும் சுப்மன் கில்லும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்திய அணி, 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து சதம்! சாதனைகளை தவிடுபொடி ஆக்கிய இளரவசன் சுப்மன் கில்!

Scroll to load tweet…

முன்னதாக, வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி வெளியேனடர். இதனால், வங்கதேச அணி 49.2 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேச அணியின் சார்பில் தௌஹித் ஹிரிடோய் மட்டும் நிலைத்து நின்று ஆடி 118 பந்துகளில் சதம் அடித்தார். ஜேக்கர் அலி அவருக்கு ஒத்துழைப்பு தந்து, 114 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவின.

இந்திய பந்து வீச்சாளர்கள் மீதமுள்ள பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தினர். சிறப்பாகப் பந்துவீசி மிரட்டிய முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். அவர் இப்போட்டியில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் சொந்தமாக்கினார். ஐசிசி போட்டியில் தனது முதல் ஆட்டத்தை விளையாடும் ஹர்ஷித் ராணா, மூன்று பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது சதம் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்த சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இந்திய அணி பிப்ரவரி 23ஆம் தேதி இதே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

பூமியின் மீது மோத வரும் சிறுகோள் 2024 YR4! தடுத்து அழிக்க பிளான் போடும் நாசா!