India vs South Africa 1st T20I: ரிங்கு சிங் வேகமாக ஓட என்ன காரணம்? உண்மையை சொன்ன சுப்மன் கில்!
இந்திய அணியில் டி20 கிங்காக என்று மாறி வரும் ரிங்கு சிங் எப்போதும் வலுவான உடல்கட்டுடன் காணப்படும் நிலையில், அவர் சிக்ஸ் அடிப்பதற்கு முக்கிய காரணமே அதுதான் என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசன் மூலமாக இந்திய அணியில் டி20 தொடரில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருபவர் ரிங்கு சிங். ஒருநாள் போட்டிகளை விட டி20 போட்டிகளில் தான் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதில், சில போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார்.
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் பறக்க விடும் திறமை கொண்டவர். அவர் சிக்ஸ் அடிப்பதற்கு அவரது பலம் தான் காரணம் என்றும், அவர் தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதில் ஒருவர் தான் சுப்மன் கில். ரிங்கு சிங் குறித்து சுப்மன் கில் கூறியிருப்பது என்னவென்று பார்க்கலாம்.
WPL 2024 Auction: ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 5 வீராங்கனைகள்!
ஆசிய விளையாட்டு போட்டிகள் கொண்ட தொடர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் பகுதியில் நடக்கிறது.
Legends League Cricket 2023: சுரேஷ் ரெய்னா அணியை வீழ்த்தி சாம்பியனான ஹர்பஜன் சிங் அண்ட் கோ!
இந்த தொடருக்கு முன்னதாக தான் எவ்வாறு தென் ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகி வருகிறேன் என்று பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். அதில், தனது உடற்பயிற்சி பற்றி குறிப்பிட்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுப்மன் கில், அவரை குரங்கு ஒன்று கடித்துவிட்டதாகவும், அதனால், தான் அவர் வேகமாக ஓடுவதாகவும் கூறினார். அப்போதுதான் ரிங்கு சிங், குரங்கு கடித்த தனது கையை காண்பித்தார். அவர் ஒரு அனுமன் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.