Ind vs Pak Super 4: 37 பந்து 10 பவுண்டரியில் 50 ரன்கள்; பாகிஸ்தான் பவுலர்களை அலறவிட்ட இளவரசர் சுப்மன் கில்!

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் அரைசதம் அடித்துள்ளார்.

Shubman Gill hit half century against Pakistan in Super Fours 3rd Match at Colombo rsk

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், முகமது ஷமியும் இடம் பெறவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் இடம் பெற்றுள்ளனர்.

RSA vs AUS: சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!

பின்னர், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். முதல் ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீசினார். இந்த ஓவரில் கடைசி பந்தில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்து இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். 2ஆவது ஓவரை நசீம் ஷா வீசினார். இந்த ஓவரை சுப்மன் கில் எதிர்கொண்டார். முதல் பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷாஹீன் அஃப்ரிடியால் பிடிக்க முடியவில்லை.

வில்வித்தை உலகக் கோப்பை: வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கர்!

இதே போன்று ஸ்லிப் பகுதியில் அடித்த வாய்ப்பையும் யாரும் பிடிக்கவில்லை. இப்படி சுப்மன் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் பாகிஸ்தான் வீரர்கள் கோட்டைவிடவே அதிரடியாக மாறி மாறி பவுண்டரியாக அடித்தார். வெறும் 37 பந்துகளில் 10 பவுண்டரி அடித்த சுப்மன் கில் தனது 7ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷாஹீன் அஃப்டி ஓவரில் மட்டும் 6 பவுண்டரி அடித்துள்ளார்.

Pakistan vs India:இந்தியா பேட்டிங்கிற்காக 7 மணி நேரம் டிராவல்; பாத்து மெதுவா.; ஷாஹீன் அஃப்ரிடியை கேட்ட ரசிகர்!

சுப்மன் கில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது அடுத்த அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 50ஆவது அரைசதத்தை இன்று ரோகித் சர்மா பூர்த்தி செய்துள்ளார். ஷதாப் கான் வீசிய ஓவரில் 6, 6, 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியுள்ளார். 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார். ரோகித் சர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

Pakistan vs India: ஓரங்கட்டப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு: பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios