வில்வித்தை உலகக் கோப்பை: வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கர்!
இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் மத்தியாஸ் புல்லர்டனிடம் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். போராடி வெற்றியை இழந்த அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஷாங்காய் உலகக் கோப்பை வெற்றியாளரான ஜாவ்கர், உலகின் நம்பர் 1 வீரரும், நடப்புச் சாம்பியனுமான மைக் ஸ்லோசரை 4 மாதங்களில் இரண்டாவது முறையாக அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தார். இறுதிப் போட்டியில் அவர் டென்மார்க்கின் புல்லெர்டனை எதிர்கொண்டார்.
இதில் 148-148 (10-10*) என்ற கணக்கில் பிரதமேஷ் ஜாவ்கர் போராடி தோல்வி அடைந்தார். சனிக்கிழமை பிற்பகுதியில் நடந்த இறுதி மோதலின் தொடக்கச் சுற்றில் இந்திய வீரர் பிரதமேஷ் ஒரு புள்ளியை இழந்ததை அடுத்து டென்மார்க் வீரரின் கை ஓங்கியது. அதிலிருந்து கிடைத்த முன்னிலையைத் தக்கவைத்த புல்லெர்டன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தினார்.
— World Archery (@worldarchery) September 10, 2023
ஆட்டத்தின் பாதியில், 89-90 என ஒரு புள்ளி பின்தங்கிய நிலையில், அடுத்த சுற்றில் ஜாவ்கர் 30 புள்ளிகளைப் பெற்று 119 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த முறை இருவரும் ஒரே மாதிரி தலா 29 புள்ளிகளை எடுத்தனர். டைபிரேக்கர் சுற்றில் ஜாவ்கர் புல்லர்டனை மிகக் குறுகிய வித்தியாசத்தில் தவறவிட்டதால், நூலிழையில் வெற்றி வாய்ப்பு தவறியது.
முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொண்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய வீரர் ஜாவ்கர், நெதர்லாந்தைச் சேர்ந்த நம்பர் 1 வீரர் ஸ்க்லோசருக்கு அரையிறுதியில், பெரும் சிம்ம சொப்பமான இருந்தார். ஒரு புள்ளி வித்தியாசத்தில் வென்ற ஜாவ்கர், ஸ்க்லோசரின் உலகக் கோப்பை கனவைத் தர்த்தார்.
ஹாட்ரிக் உலகக் கோப்பை வெற்றிகளுக்குச் சொந்தமான நெதர்லாந்தின் ஸ்க்லோசர், 2016, 2019, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றவர்.
தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் ஈட்ட எப்படி முதலீடு செய்யலாம்?