தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் ஈட்ட எப்படி முதலீடு செய்யலாம்?
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் வருங்கால வாழ்க்கைக்கு போதுமான வருமானம் கிடைக்க எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்யலாம் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Senior Citizen Investment
எடுத்துக்காட்டுக்காக, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நபரிடம் ரூ.20 லட்சம் மூலதனத்தொகை கையிருப்பில் உள்ளதாக்க் கொள்ளலாம். இந்தத் தொகையைத் தவிர வேறு வருமானம் எதுவும் இல்லாத அந்த நபர் தன் குடும்பத்தின் செலவுகளை ஈடுகட்ட, எப்படி முதலீடு செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம் என்று பார்ப்போம்.
Senior Citizen Investment Plan
ஓய்வுக்குப் பின் வேறு எந்த வருமானமும் இல்லை என்றால் ரூ.20 லட்சம் சேமிப்பை ஈக்விட்டி போன்ற அதிக அளவு லாபம் கொடுக்கும் வாய்ப்புள்ள வழிகளில் முதலீடு செய்ய முடியாது. ஏனெனில் அது நிலையற்றதாக இருக்காது. ரிக்ஸ் அதிகமாக இருக்கும்.
Senior Citizen Savings
ரூ.20 லட்சம் மூலதனத்தில் 9 முதல் 12 சதவீதம் தொகையை வழக்கமான செலவுகளுக்கான வருவாயாக தொடர்ந்து பெறும் வகையில் முதலீடு செய்ய முடியும். முதியோருக்கான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால், அது 8-8.5 சதவீத வருமானம் மட்டுமே தரும்.
senior citizen investment options
இந்த சூழ்நிலையைச் சமாளிக்க சிறந்த வழி வெவ்வேறு வகையில் முதலீடுகளைப் பிரித்துக்கொள்ளலாம். முற்றிலும் பாதுகாப்பான முதலீடு மற்றும் குறைவான அபாயம் கொண்ட நீண்ட கால முதலீடு என இரண்டு விதமான முதலீடுகளைத் தேர்ந்தெடுத்தால் 9-12 சதவீத வருமானத்தைப் பெறலாம்.
senior citizen investment schemes
ஒரு மணி மார்க்கெட் ஃபண்டில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்யலாம். இதன் மூலம் பெறும் குறைந்தபட்ச வருவாய் 5 சதவீதம் என்றால் மாதத்திற்கு ரூ.2083 கிடைக்கும். 6 சதவீதம் என்றால் ரூ.2500 கிடைக்கும்.
senior citizen investment limit
இன்னொரு 5 லட்சம் ரூபாயை நடுத்தர கால கடன் நிதி அல்லது கார்ப்பரேட் பாண்ட் நிதியில் முதலீடு செய்யலாம். அல்லது மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் ஒன்றில் முதலீடு செய்யலாம். இதில் 8-8.5% நிலையான வட்டி வருவாயாகக் கிடைக்கும்.
senior citizen investment scheme in post office
மேலும், 5 லட்சம் ரூபாய் முதலீட்டை கன்சர்வேடிவ் ஹைப்ரிட் ஃபண்டில் 3 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யலாம். இதில் 11 சதவீத வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொண்டால் மாதத்திற்கு ரூ.4,583 கிடைக்கும்.
senior citizen investment portfolios
கடைசி 5 லட்சம் ரூபாய் பணத்தை பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் 14 சதவீத வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், இது மாதத்திற்கு ரூ.4,583 வருவாயைக் கொடுக்கும்.
senior citizen savings scheme
இவ்வாறு கிட்டத்தட்ட ரூ.15,000 வரை மாதம் தோறும் வருவாய் பெறலாம். அதே வேளையில் இது மூலதனத் தொகையின் நிலையான வருமானத்தைவிட அதிகமான வருமானத்தை வழங்கும்.
senior citizen saving scheme interest rate
ஆதித்யா பிர்லா சன் லைஃப் பண மேலாளர் நிதி, ஹெச்டிஎப்சி கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட், கோடக் கடன் ஹைபிரிட் நிதி, ப்ரூ ஐசிஐசிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்வது எதிர்பார்க்கும் பலனைக் கொடுப்பதாக இருக்கும் என்று வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.