அறுவை சிகிச்சைக்கு செல்லும் ஷ்ரேயாஸ் ஐயர் - ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகல்!

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

Shreyas Iyer will miss IPL 2023 and WTC Final due to back injury

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் ஷ்ரேயாஸ் ஐயர். இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்று விளையடினார். இந்திய அணியில் 4ம் வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. கடைசியாக நடந்த வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் சிறப்பான பங்களிப்பு செய்தார். அதன் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அந்த தொடரில் இடம் பெறவில்லை.

மன வேதனையுடன் திரும்பிச் சென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா; அடுத்த ஆண்டு வலுவாக வருவோம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. அதன் பிறகு சிகிச்சை பெற்று வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 2ஆவது டெஸ்ட் போட்டியிலும், 3ஆவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடினார். ஆனால், 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்த போது 4ஆவது வீரராக களமிறங்க வேண்டிய இடத்தில் அவர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா களமிறங்கினார். அவருக்கு மீண்டும் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.

இந்தியாவின் சாதனையை முறியடிக்க ஆஸ்திரேலியா திட்டம்: சென்னை சேப்பாக்கம் யாருக்கு சாதகம்?

இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றார். இந்த நிலையில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த நிலையில், தற்போது அவர் காயம் காரணமாக விலகியது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி கூட கிடையாது: ஐபிஎல் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த 65 பிரபலங்கள் யார் யார்?

லண்டனுக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஷ்ரேயாஸ் ஐயர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது 4 முதல் 5 மாதங்கள் வரையில் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், ஷ்ரேயாஸ் ஐயர், வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்காத நிலையில், தற்போது ஷ்ரேயாஸ் ஐயரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

IND vs AUS Chennai 3rd ODI: போட்டிக்கு நடு நடுவில் மழை பெய்ய வாய்ப்பு - போட்டியில் பாதிப்பு வருமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios