Asia Cup 2023, India vs Pakistan: இரவு பதற்றமாக இருந்தேன், தூங்க முடியவில்லை – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!
ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது தற்போது தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இந்தப் போட்டியானது நடக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்று தெரிகிறது.
India vs Pakistan: ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் இடம் பெற்றது குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் கூறியிருப்பதாவது: நான் ஆசிய கோப்பையில் விளையாடுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இந்திய அணிக்கு திரும்புவது என்பது மெதுவாகவே நடந்தது. இந்திய அணியின் தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் நான் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
Asia Cup 2023: ஆசிய கோப்பையில் ஆதிக்கம் செலுத்தியது யார்? இந்தியாவா? பாகிஸ்தானா?
நேற்று இரவு பதற்றமாகவே இருந்தேன். இரவு தூங்கமுடியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறேன். இந்திய அணியின் ஒரு அங்கமாக இருப்பதற்கும், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் பயணிக்கவும் நாங்கள் பாக்கியமாக இருக்கிறோம்.
டிரஸ்ஸிங் அறையில் உற்சாகமாக உள்ளது. இந்தப் போட்டியை எதிர் நோக்கியிருக்கிறோம். ஷாஹீன் அஃப்ரிடி, ஹரீஷ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரது பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி. பந்தை பார்த்து சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது தான் திட்டம் என்று கூறியுள்ளார்.
India vs Pakistan: கிளியராக இருக்கும் வானம்: டாஸ் திட்டமிட்டபடி போடப்படுமா?