IPL 2023: ஷிம்ரான் ஹெட்மயர் அதிரடி அரைசதம்.. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

ஷிம்ரான் ஹெட்மயரின் அதிரடி அரைசதத்தால் குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 
 

shimron hetmyer half century helps rajasthan royals to beat gujarat titans in ipl 2023

ஐபிஎல் 16வது சீசனில் அபாரமாக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், முகமது ஷமி, மோஹித்சர்மா. 

IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் 5 தொடர் தோல்விகள்..! கங்குலியை நக்கலடித்த ரவி சாஸ்திரி

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ரிதிமான் சஹா 4 ரன்னில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 20 ரன்களுக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். நின்று ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் பொறுப்புடன் பேட்டிங் ஆடிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்கள் அடித்து அவரும் அரைசதத்தை தவறவிட்டார். அபினவ் மனோகர் 13 பந்தில் 27 ரன்கள் அடித்து முடித்து கொடுக்க, 20 ஒவரில் 177 ரன்கள் அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

178 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் (0) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். தேவ்தத் படிக்கல் 25 பந்தில் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். ரியான் பராக்கும் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் சஞ்சு சாம்சன் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

IPL 2023: ஐபிஎல்லில் ரோஹித் சர்மா புதிய சாதனை..! ஷிகர் தவானை பின்னுக்குத்தள்ளி முதலிடம்

அதன்பின்னர் பின்வரிசையில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஷிம்ரான் ஹெட்மயர் 26 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios