MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: ஐபிஎல்லில் ரோஹித் சர்மா புதிய சாதனை..! ஷிகர் தவானை பின்னுக்குத்தள்ளி முதலிடம்

IPL 2023: ஐபிஎல்லில் ரோஹித் சர்மா புதிய சாதனை..! ஷிகர் தவானை பின்னுக்குத்தள்ளி முதலிடம்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த  வீரர் என்ற சாதனையை படைத்தார். 

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 16 2023, 06:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய நிலையில், 3வது போட்டியில் வெற்றி பெற்றது. வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இன்று கேகேஆரை எதிர்கொண்டு ஆடிவருகிறது. கேகேஆர் நிர்ணயித்த 186 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டிவருகிறது.
 

24

மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற வேண்டுமென்றால், கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தாக வேண்டும். ஆனால் ரோஹித் சர்மா இதுவரை சரியாக ஆடவில்லை.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தொடர் தோல்விகள்..! ரிக்கி பாண்டிங்கை சீண்டிய சேவாக்
 

34

கேகேஆர் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்தமான அணி. கேகேஆருக்கு எதிராக பொதுவாக அபாரமாக ஆடி ஸ்கோர் செய்வது ரோஹித்தின் வழக்கம். கேகேஆருக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். முதல் இன்னிங்ஸில் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்தார். ரோஹித் 2வது இன்னிங்ஸில் வெறும் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். ஆனால் 20 ரன்கள் மட்டுமே அடித்து பெரிய அளவில் இம்பேக்ட் கொடுக்காமல் சென்றார். ஆனாலும் அந்த 20 ரன்னில் ஒரு சாதனையை படைத்துள்ளார்.

IPL 2023: வலுவான் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

44

இன்று அடித்த 20 ரன்னுடன் சேர்த்து ஐபிஎல்லில் கேகேஆருக்கு எதிராக 1040 ரன்களை குவித்துள்ளார் ரோஹித் சர்மா. இதன்மூலம் ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஷிகர் தவான் சிஎஸ்கேவிற்கு எதிராக 1029 ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த நிலையில், கேகேஆருக்கு எதிராக 1040 ரன்கள் அடித்து தவான் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா. 

About the Author

KV
karthikeyan V
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவுக்கு பெரிய ஷாக்..! ஹர்திக் அடித்த பந்து.. நிலைகுலைந்த சிராஜ்: களமிறங்குவதில் சிக்கல்..
Recommended image2
பாகிஸ்தானுக்கு பேரிடி..! முதல் போட்டியே மழையால் காலி - சிதையும் செமி பைனல் கனவு..?
Recommended image3
அபிஷேக் சர்மாவின் டக் அவுட்களுக்கு சகோதரி கோமல் காரணமா? விமர்னத்திற்குள்ளான சகோதரி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved