IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் 5 தொடர் தோல்விகள்..! கங்குலியை நக்கலடித்த ரவி சாஸ்திரி
ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை தழுவிய நிலையில், அந்த அணியின் இயக்குநர் சௌரவ் கங்குலியை நக்கலடித்துள்ளார் ரவி சாஸ்திரி.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.
பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர், ஆர்சிபி அணிகளும் நன்றாக ஆடிவருகின்றன. முதலிரண்டு போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அதற்கடுத்த 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. ஆனால் ஆடிய 5 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை தழுவி இந்த சீசனில் படுமோசமாக சொதப்பிவருவது டெல்லி கேபிடள்ஸ் தான்.
IPL 2023: ஐபிஎல்லில் ரோஹித் சர்மா புதிய சாதனை..! ஷிகர் தவானை பின்னுக்குத்தள்ளி முதலிடம்
டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர் தோல்வியிலிருந்து மீளமுடியாமல் தவித்துவரும் நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் குழு மற்றும் அணி நிர்வாகத்தின் செயல்பாடு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி சிறப்பாக ஆடும்போது அதற்கான கிரெடிட்டை ஏற்றுக்கொள்ளும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சேவாக் தெரிவித்திருந்தார்.
பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலி தான் டெல்லி கேபிடள்ஸ் அணியின் இயக்குநராக இருந்துவருகிறார். டெல்லி அணி தொடர்ச்சியாக தோல்விகளை தழுவிவரும் நிலையில், கங்குலியை ரவி சாஸ்திரி நக்கலடித்துள்ளார். ”முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி. இப்போது டக் அவுட்டில் அமர்ந்திருக்கும் அவர், மேலே மாடியில் அமர்வது நன்றாக இருந்தது என்று நினைப்பார் என்று கங்குலியை நக்கலடித்துள்ளார்.
IPL 2023: ஐபிஎல்லில் ரோஹித் சர்மா புதிய சாதனை..! ஷிகர் தவானை பின்னுக்குத்தள்ளி முதலிடம்
அதாவது பிசிசிஐ தலைவராக மாடியில் அமர்ந்திருந்தபோது ஜாலியாக இருந்த கங்குலி, இப்போது டெல்லி அணியின் இயக்குநராக பெரிய தலைவலியை அனுபவித்துவருகிறார் என்கிற ரீதியில் அவரை நக்கலடித்துள்ளார் சாஸ்திரி.