Asianet News TamilAsianet News Tamil

ரசிகர்களுக்கு கடவுளாக தெரிந்த ஷர்துல் தாக்கூர்: ஓவலில் 3 இன்னிங்ஸில் 3 அரைசதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஓவலில் 3 இன்னிங்ஸில் 3ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார்.

Shardul Thakur hit his 3rd half Century an oval in 3 innings against Australia in WTC Final 2023
Author
First Published Jun 9, 2023, 6:50 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்தனர்.

முதல் இந்திய வீரராக இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்து அஜிங்கியா ரஹானே சாதனை!

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 13, சட்டேஷ்வர் புஜாரா 14, விராட் கோலி 14 ரன்கள் என்று நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு வந்த ரவீந்திர ஜடேஜா ஓரளவு நம்பிக்கை கொடுத்தார். அவர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சாப்பாட்டு பிளேட்டோடு இருந்த தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு விராட் கோலி ரிப்ளை!

பின்னர் பரத் 5 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து அஜிங்கியா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா பாலோ ஆன் தவிர்க்குமா என்று எதிர்பார்த்த நிலையில், இருவரும் இணைந்து அரைசதம் அடித்து பாலோ ஆன் தவிர்க்க உதவினர்.

அவுட்டாகிவிட்டால் இப்படித்தான் போய் சாப்பிடுவதா? சோறுதான் முக்கியமா? விராட் கோலியை விமர்சித்த நெட்டிசன்கள்!

ஒரு கட்டத்தில் ரஹானே அரைசதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 5020 ரன்கள் எடுத்தார். அவர் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று, ஷர்துல் தாக்கூரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஓவல் மைதானத்தில் விளையாடிய 3 இன்னிங்ஸிலும் தாக்கூர் 3 முறை அரைசதம் அடித்துள்ளார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 5 ரன்னிலும், முகமது ஷமி 13 ரன்னிலும் ஆட்டமிழக்க இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் குவித்து 173 ரன்கள் பின் தங்கியுள்ளது.

தலை, கை, முழங்கை என்று அடி மேல் அடி வாங்கும் இந்திய வீரர்கள்; அஸ்வின் சொன்னது நடந்துருச்சு!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios