Asianet News TamilAsianet News Tamil

முதல் இந்திய வீரராக இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்து அஜிங்கியா ரஹானே சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் இந்திய வீரராக அஜிங்கியா ரஹானே அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Ajinkya Rahane is the 1st Indian Cricketer to score a fifty in World Test Championship Final 2023, Oval
Author
First Published Jun 9, 2023, 6:23 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 429 ரன்கள் குவித்தது.

சாப்பாட்டு பிளேட்டோடு இருந்த தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு விராட் கோலி ரிப்ளை!

 

பின்னர், ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சுப்மன் கில் இருக்கிறார் 13 ரன்களில் கிளீன் போல்டானார். ஒருகட்டத்தில் 30 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதுமட்டுமின்றி 6.4 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அவுட்டாகிவிட்டால் இப்படித்தான் போய் சாப்பிடுவதா? சோறுதான் முக்கியமா? விராட் கோலியை விமர்சித்த நெட்டிசன்கள்!

அதன் பிறகு சட்டேஷ்வர் புஜரா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்தனர். ஆனால், புஜாரா 14 ரன்களாக இருந்த போது கில் ஆட்டமிழந்ததைப் போன்று ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலியும் 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

தலை, கை, முழங்கை என்று அடி மேல் அடி வாங்கும் இந்திய வீரர்கள்; அஸ்வின் சொன்னது நடந்துருச்சு!

இதையடுத்து 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய கேஎஸ் பரத் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார். அவர் அடிமேல் அடி வாங்கி வலிக்கு மாத்திரையும் எடுத்துக் கொண்டார். ஒருபுறம் ரஹானே 46 ரன்னாக இருந்த போது சிக்ஸர் அடித்து அரைசதம் அடித்தார். இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் இந்திய வீரராக ரஹானே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆனால், அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 89 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதுவரையில் வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அஜிங்கியா ரஹானே 96, 118, 103, 147, 126, 108, 81, 112, 89 என்று ரன்கள் குவித்துள்ளார். 83 டெஸ்ட் போட்டிகளில் 141 இன்னிங்ஸில் ஆடிய அஜிங்கியா ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் 5020 ரன்களை கடந்துள்ளார்.

TNPL 2023: டிஎன்பிஎல் தொடரில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios