சாப்பாட்டு பிளேட்டோடு இருந்த தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு விராட் கோலி ரிப்ளை!

ஆட்டமிழந்த நிலையில் வெளியில் சென்று உணவருந்திய விராட் கோலியை ரசிகர்கள் விமர்சித்த நிலையில் அதற்கு கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Virat Kohli Reply to fans who are trolled him on social media on 2nd day of WTC Final 2023, Oval

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 429 ரன்கள் குவித்தது.

அவுட்டாகிவிட்டால் இப்படித்தான் போய் சாப்பிடுவதா? சோறுதான் முக்கியமா? விராட் கோலியை விமர்சித்த நெட்டிசன்கள்!

பின்னர், ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சுப்மன் கில் இருக்கிறார் 13 ரன்களில் கிளீன் போல்டானார். ஒருகட்டத்தில் 30 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதுமட்டுமின்றி 6.4 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தலை, கை, முழங்கை என்று அடி மேல் அடி வாங்கும் இந்திய வீரர்கள்; அஸ்வின் சொன்னது நடந்துருச்சு!

அதன் பிறகு சட்டேஷ்வர் புஜரா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்தனர். ஆனால், புஜாரா 14 ரன்களாக இருந்த போது கில் ஆட்டமிழந்ததைப் போன்று ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலியும் 14 ரன்களில் வெளியேறினார். இந்தியா இக்கட்டான நிலையில், தொடக்க வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த வெளியேறிய நிலையில், எந்தவித வருத்தமும் இல்லாமல் தனக்கு சோறு தான் முக்கியம் என்பது போன்று விராட் கோலி உணவருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

TNPL 2023: டிஎன்பிஎல் தொடரில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இது போன்ற ஒரு சூழ்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் முன் கூட்டியே ஆட்டமிழந்த சச்சின் டெண்டுல்கர் 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார் என்றும், ஆனால், ஆட்டமிழந்த கையோடு விராட் கோலி உணவருந்தினார் என்றும் ரசிகர்கள் விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யாராக இருந்தாலும் ஒருவர் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பாத திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியா, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத், விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, IND Vs AUS Live Score Day 3, WTC Final Day 3 live, WTC Final live news, WTC Final 2023, IND VS AUS, Asianet News, Watch WTC Final IND VS AUS, Rohit Sharma, Pat Cummins, Cheteshwar Pujara, Virat Kohli, Ravindra Jadeja, ind vs aus test live match, ind vs aus test online, ind vs aus test live score, ICC World Test Championship final 2023, IND VS AUS Day 3, India vs Australia test final, WTC Final, India vs Australia WTC final 2023, WTC final squad, WTC final today,

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios