ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும்..? ஷேன் வாட்சன் ஆருடம்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும் என்று ஷேன் வாட்சன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019ம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-2021ல் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்தது. அந்த 2 ஆண்டு காலக்கட்டத்தில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளை பெற்று, அதிக வெற்றி சதவிகிதங்களுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும்.
அந்தவகையில் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இந்தியாவை ஃபைனலில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.
இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய மேட்ச் வின்னர்..! பாகிஸ்தானுக்கு பாதகம்.. இந்தியாவிற்கு சாதகம்
2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்துவருகிறது. இந்த நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி 75 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 70 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய அணி 2ம் இடத்திலும் உள்ளன. 3, 4, 5ம் இடங்களில் முறையே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ளன.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் உள்ள நிலையில், அந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும் என ஷேன் வாட்சன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகள்.. வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி
இதுகுறித்து கருத்து கூறியுள்ள ஷேன் வாட்சன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை இனிமேல் பின்னுக்குத்தள்ளுவது கடினம். 2 அணிகளுமே சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன. ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா நன்றாக ஆடியிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தானையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவர்களும் ஃபைனலுக்கான கதவை தட்ட முயற்சிப்பார்கள் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.