Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகள்.. வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்க அணிகளின் சாதனையை தகர்த்துள்ளது.
 

india breaks pakistan record and creates historic record in odi cricket
Author
Harare, First Published Aug 20, 2022, 8:05 PM IST

இந்திய அணி வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் ஆகிய அனைத்து ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது.  இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்து சாதனை படைத்துவருகிறது.

அந்தவகையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிக்கு பிறகு அபாரமான சாதனை படைத்துள்ளது இந்திய அணி. ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய மேட்ச் வின்னர்..! பாகிஸ்தானுக்கு பாதகம்.. இந்தியாவிற்கு சாதகம்

இன்று ஹராரேவில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஹராரேவில் தொடர்ச்சியாக இந்திய அணியின் 11வது வெற்றி. இதன்மூலம் வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஒரு அணி பெற்ற அதிகபட்ச வெற்றி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்திய அணி.

இதற்கு முன் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்க அணிகள் வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10 வெற்றிகளுடன் சாதனையை தன்னகத்தே கொண்டிருந்தன. இப்போது அந்த சாதனையை இந்திய அணி முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்த தென்னாப்பிரிக்கா! பரிதாப இங்கிலாந்து

பாகிஸ்தான் அணி 1989-1990 காலக்கட்டத்தில் ஷார்ஜாவில் தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணி 2013-2017 காலக்கட்டத்தில் கிழக்கு லண்டனிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 1992-2001ல் பிரிஸ்பேனிலும் தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன.

இந்திய அணி 2013 முதல் ஹராரேவில் தொடர்ச்சியாக 11 வெற்றிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios