அதிவேக யார்க்கர் வீசி ஆஃப்கான் வீரரின் காலைஉடைத்த ஷாஹீன் அஃப்ரிடி! இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை?வைரல் வீடியோ
டி20 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில், அதிவேக யார்க்கர் வீசி ஆஃப்கான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸின் காலை உடைத்தார் ஷாஹீன் அஃப்ரிடி. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி வரும் 23ம் தேதி மெல்பர்னில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்விக்கு இம்முறை பழிதீர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.
அந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. ஆரம்பத்திலேயே ரோஹித், ராகுல், கோலி ஆகிய டாப் மற்றும் முக்கியமான 3 வீரர்களை வீழ்த்திவிட்டதால் இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்கமுடியாமல் தோற்றது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு சரியான மாற்று வீரரா முகமது ஷமி..? சச்சின் டெண்டுல்கர் அலசல்
இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக பவர்ப்ளேயில் ரோஹித், ராகுல், கோலி ஆகிய மூவருக்குமே பிரச்னை இருப்பதால் ஷாஹீன் அஃப்ரிடியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். 140 கிமீ வேகத்திற்கு மேல் நன்றாக ஸ்விங் செய்து வீசக்கூடிய பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் மாதிரியான வேகத்தில் வீசக்கூடிய பவுலர் இந்திய அணியில் இல்லாததே பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிவேகமாக வீசி பயிற்சி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் காலை உடைத்தார் ஷாஹீன் அஃப்ரிடி. ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான பயிற்சி போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 153 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி 2.2 ஓவரில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானது.
இதையும் படிங்க - இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி ரத்து..! 2 போட்டிகளை கெடுத்துவிட்ட மழை
இந்த போட்டியின் முதல் ஓவரிலேயே ஆஃப்கான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி. முதல் ஓவரின் 5வது பந்தைத்தான் தனது முதல் பந்தாக எதிர்கொண்ட குர்பாஸுக்கு அதிவேகமாக யார்க்கர் வீசினார் ஷாஹீன் அஃப்ரிடி. அந்த பந்து சரியாக, பேட்ஸ்மேன் குர்பாஸின் இடது காலிலேயே நேரடியாக குத்தியது. அம்பயர் அவருக்கு அவுட் கொடுக்க, குர்பாஸோ வலியால் துடித்தார்.
அவரால் நடக்க முடியாததால் மற்றொரு வீரர் வந்து முதுகில் அவரை தூக்கிச்சென்றார். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பையில் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு முக்கியமான வீரர். விக்கெட் கீப்பரும் அவரே. அதனால் அவர் ஃபிட்டாக இருப்பது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அவசியம்.