டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு சரியான மாற்று வீரரா முகமது ஷமி..? சச்சின் டெண்டுல்கர் அலசல்
டி20 உலக கோப்பையில் பும்ரா காயத்தால் ஆடாததையடுத்து, அவருக்கு மாற்று வீரராக ஜஸ்ப்ரித் பும்ரா அறிவிக்கப்பட்டது குறித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வரும் 22ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. 23ம் தேதி மெல்பர்னில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் நல்ல பேலன்ஸான, வலுவான அணியாக திகழ்கிறது.
இதையும் படிங்க - ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ்..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவலுவாக உள்ளது. அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் என தரமான ஸ்பின்னர்களையும், புவனேஷ்வர் குமார், ஷமி, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய சிறந்த ஃபாஸ்ட்பவுலர்களையும் பெற்றுள்ளது. பும்ரா ஆடாததால் டெத் ஓவர் கவலை இருந்துவந்த நிலையில், ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் கடைசி ஓவரில் துல்லியமான யார்க்கர்களை வீசி 3 விக்கெட் வீழ்த்தி 11 ரன்களை அடிக்கவிடாமல் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து நம்பிக்கை கொடுத்தார் ஷமி. எனவே இந்திய அணி மிக வலுவாக உள்ளது.
எனவே இந்திய அணியின் கவலையாக இருந்த டெத் ஓவர் கவலையும் ஷமியின் அபாரமான பவுலிங்கால் தீர்ந்துள்ளது. இந்திய அணி முழு பலத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மற்றும் கோப்பையை வெல்வதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளது.
பும்ராவிற்கு மாற்று வீரராக ஷமி - சிராஜ் ஆகிய இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற சந்தேகமும், இதுதொடர்பான விவாதமும் பரபரப்பாக இருந்த நிலையில், ஓராண்டாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடவில்லை என்றாலும், ஷமியின் அனுபவம் மற்றும் திறமை மீது நம்பிக்கை வைத்து ஷமி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். தனது தேர்வை வெறும் ஒரு ஓவரின் மூலம் நியாயப்படுத்தியும் உள்ளார் ஷமி.
இதையும் படிங்க - ஷமி Bhai, உங்களோட சீம் பவுலிங்கிற்கு நான் பெரிய ரசிகன்.! ஷாஹீன் அஃப்ரிடி - ஷமி உரையாடல்.. வைரல் வீடியோ
இந்நிலையில், பும்ராவிற்கு மாற்று வீரராக ஷமி தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், ஷமி மிகச்சிறந்த பவுலர். பும்ராவுக்கு சரியான மாற்று வீரர் ஷமி. நல்ல ஸ்டிரைக் பவுலர் ஷமி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நீண்டகாலமாக ஆடிவருகிறார். பெரிய மற்றும் முக்கியமான போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர் ஷமி. ஷமியின் பவுலிங்கை நான் என்ஜாய் செய்து பார்ப்பேன். பும்ராவின் இடத்தை நிரப்ப ஷமி தான் சரியான வீரர் என்றாலும், ஆடும் லெவன் குறித்து என்னால் எதுவும் கூறமுடியாது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.