ஷமி Bhai, உங்களோட சீம் பவுலிங்கிற்கு நான் பெரிய ரசிகன்.! ஷாஹீன் அஃப்ரிடி - ஷமி உரையாடல்.. வைரல் வீடியோ
இந்திய அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி மற்றும் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி பேசிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
டி20 உலக கோப்பை தொடரில் தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. வரும் 21ம் தேதி வரை தகுதிப்போட்டிகள் நடக்கும் நிலையில், 22ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன.
சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன. இன்று பிரிஸ்பேனில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேஎல் ராகுல்(57) மற்றும் சூர்யகுமார் யாதவ்(50) ஆகிய இருவரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது இந்திய அணி.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சிக்கந்தர் ராசா அதிரடி அரைசதம்.. தகுதிப்போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி
187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 176 ரன்கள் அடித்திருந்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த போட்டியில் அந்த கடைசி ஓவரை தனது முதல் ஓவராக வீசிய ஷமி, 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து துல்லியமான யார்க்கர்களை வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பும்ரா ஆடாததால் டெத் ஓவர்கள் பெரும் கவலையாக இருந்துவந்த நிலையில், ஷமி அந்த ஒரு ஓவரின் மூலம் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையளித்தார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி போட்டியை தொடர்ந்து பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி அங்கு நடந்ததால் பாகிஸ்தான் அணியினரும் அங்குதான் இருந்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு பின், பாகிஸ்தான் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி ஷமியிடம் வந்து பேசினார். எப்படி இருக்கீங்க ஷமி bhai என்று பேச தொடங்கிய ஷாஹீன் அஃப்ரிடி, நான் பந்துவீச ஆரம்பித்த காலத்திலிருந்து உங்கள் (ஷமி) பவுலிங்ககை பார்த்துவருகிறேன். உங்களது ரிஸ்ட் பொசிசன் மற்றும் சீம் பவுலிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார் ஷாஹீன்.
இதையும் படிங்க - லாங் ஆனில் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச்சை பார்த்து மிரண்டுபோன ஆஸ்திரேலிய வீரர்கள்..! வைரல் வீடியோ
அதற்கு பதிலளித்த ஷமி, ரிலீஸ் பாய்ண்ட் சரியாக இருந்தால் சீம் அருமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.