கிடைத்த வாய்ப்பையும் கோட்டைவிடும் சஞ்சு சாம்சன்: உலகக் கோப்பை வாய்ப்பு அம்பேல்?

சஞ்சு சாம்சனுக்கு கொடுக்கப்படும் வாய்ப்பையெல்லாம் கோட்டைவிட்டு வரும் நிலையில் அடுத்து வர உள்ள உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Sanju Samson may dropped from 3rd T20 against West Indies due to bad Performance

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், 19 பந்துகள் பிடித்து வெறும் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 3ஆவது ஒரு நாள் போட்டியில் 41 பந்துகள் விளையாடி 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் விளாசி 51 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியது. இதில் முதல் டி20 போட்டியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 12 ரன்களில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், 7 பந்துகள் விளையாடி ஒரு பவுண்டரி அடித்த நிலையில் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

தேசிய ஈட்டி எறிதல் தினம்: 1000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டிக்கு ஏற்பாடு!

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது டி20 போட்டி நாளை நடக்கிறது. தொடர்ந்து சொதப்பி வரும் சஞ்சு சாம்சனுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்பின்னர்களுக்கு போட்ட ஸ்கெட்ச்: தானாக வந்து சிக்கிய இந்தியா- ரோவ்மன் பவல் டாக்!

இதே போன்று சுப்மன் கில்லும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்பில்லை என்றால், சுப்மன் கில்லிற்குப் பதிலாக வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ்விற்கு அடுத்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கலாம் என்று தெரிகிறது.

WI vs IND 2nd T20: வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்: பவுலர்கள் அடித்து கொடுக்க கடைசில வெற்றி பெற்ற வெ.இ!

ஏற்கனவே 2 டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து தோல்வி அடைந்து மோசமான சாதனையை நிகழ்த்திவிட்டது. அதுவும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. எஞ்சிய 3 டி20 போட்டிகளில் இந்தியா கண்டிப்பான முறையில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும். இல்லையென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். ஆதலால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால், அயர்லாந்து தொடரில் பிளேயிங் 11ல் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios