பிசிசிஐக்கு நிகரான ஊதியம், வீடு, கார் எல்லாம் தருகிறோம்..! அயர்லாந்தின் கோரிக்கையை நிராகரித்த சஞ்சு சாம்சன்

பிசிசிஐக்கு நிகரான ஊதியம், வீடு, கார் என அனைத்து வசதிகளும் செய்துதருவதாக கூறி, தங்கள் நாட்டு அணிக்காக ஆடுமாறு சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. ஆனால் சஞ்சு சாம்சன் அந்த ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டார்.
 

sanju samson denied ireland cricket board offer to represent their national cricket team

இந்திய அணியின் திறமையான கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன். இவர் இயல்பான திறமைசாலி. பெரிய ஷாட்டுகளை அலட்டலின்றி அசால்ட்டாக அடிக்கக்கூடியவர். அதிரடியாக ஆடக்கூடிய சாம்சன், அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி அசத்தும் வீரர். இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர் திறமையான பேட்ஸ்மேன் தான் என்றாலும், நிலையான, சீரான ஆட்டத்தை ஆடாததுதான் அவரது பெரிய பிரச்னை. அவருக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் வாய்ப்பளித்துவிட்டு இந்திய அணி நிர்வாகம் மீண்டும் ஒதுக்கிவிடுகிறது. இதுதான் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது.

2015ம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன் திறமையான வீரராக இருந்தும் கூட, அவருக்கு இன்னும் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. 2015ம் ஆண்டே இந்திய டி20 அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், இதுவரை 16 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இதிலிருந்தே அவர் எந்தளவிற்கு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியலாம். 

பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தானே, அவரால் நிரந்தர இடத்தை பிடிக்க முடியும். தோனி, கோலி, ரோஹித் மாதிரியான நிரந்தர கேப்டன்கள் மட்டுமல்லாது தவான், ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என பொறுப்பு கேப்டன்களின் கேப்டன்சியிலும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுகிறார். கேப்டன்கள் யாராக இருந்தாலும் சாம்சன் புறக்கணிக்கப்படுவது மட்டும் மாறுவதில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கூட சஞ்சு சாம்சன் நன்றாக ஆடியும் புறக்கணிக்கப்பட்டார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்புகிறார். அவருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கும் இந்திய அணி, சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்பளிக்காமல் ஓரங்கட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் விமர்சிக்கும் அளவிற்கு சாம்சனின் புறக்கணிப்பு அம்பலப்பட்டது.

அதனால் சஞ்சு சாம்சன் அவரது திறமையை மதிக்கும் வெளிநாட்டு அணிக்காக ஆடலாம் என்று ரசிகர்களே கருத்து கூறினர். இந்நிலையில், அதற்கேற்ப அயர்லாந்து கிரிக்கெட் வாரியம், தங்கள் அணிக்கு ஆடுமாறு சஞ்சு சாம்சனை அணுகியது. பிசிசிஐக்கு நிகரான ஊதியம், வீடு, கார் என அனைத்து சலுகைகளும் வழங்குவதாக சஞ்சு சாம்சனை அணுகியது அயர்லாந்து கிரிக்கெட் வாரியம்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

ஆனால் இந்தியாவிற்காகத்தான் ஆடுவேன் என்றும், பிசிசிஐ அனுமதித்தால் வெளிநாட்டு டி20 லீக்குகளில் ஆடுவேன் என்றும் கூறி நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக, அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டார் சஞ்சு சாம்சன்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios