இவரை மாதிரியான ஒரு பிளேயர் இந்திய அணியில் கண்டிப்பா தேவை.! அதிரடி வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு
இந்திய அணியில் தீபக் ஹூடா மாதிரியான வீரர் எப்போதுமே தேவை என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில், ஐபிஎல்லில் சில வீரர்கள் அபாரமாக விளையாடினர்.
தினேஷ் கார்த்திக், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா ஆகிய வீரர்கள் ஐபிஎல்லில் அபாரமாக பேட்டிங் ஆடி, தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 அணிகளில் இடம்பிடித்தனர். இவர்களில் திரிபாதி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறவில்லை. ஆனால் அயர்லாந்து தொடரில் இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தும் ஆடும் லெவனில் தீபக் ஹூடாவிற்கு இடம் கிடைக்கவில்லை. எனவே அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஐபிஎல் 15வது சீசனில் அபாரமாக பேட்டிங் ஆடி 4 அரைசதங்களுடன் 451 ரன்களை குவித்த தீபக் ஹூடா, அணிக்கு தேவைப்படும் போதெல்லாம், கேப்டன் அழைத்தபோதெல்லாம் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து பவுலிங்கிலும் அசத்தினார். ஒரு ஆல்ரவுண்டராக அசத்துகிறார் ஹூடா.
இதையும் படிங்க - நீ பெரிய பிளேயரா இருக்கலாம்; அதுக்காக 14 மேட்ச்ல ஒரு அரைசதம் கூட அடிக்கலைனா எப்படி?ரோஹித்தை விளாசிய கபில் தேவ்
அயர்லாந்து தொடரில் ஹூடா ஆடவுள்ள நிலையில், ஹூடா குறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், அயர்லாந்து தொடரில் தீபக் ஹூடாவை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். ஐபிஎல்லில் அவரது சிறந்த ஆட்டத்தை பார்த்தோம். நீண்டகாலமாகவே தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார் ஹூடா. இவரை மாதிரியான ஒரு வீரர் இந்திய அணிக்கு பின்வரிசையில் தேவை. பின்வரிசையில் ஆடுவது மிகக்கடினம். ஆனால் அந்த பணியை ஐபிஎல்லில் செவ்வனே செய்தார் என்றார் மஞ்சரேக்கர்.