நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 50ஆவது சதம் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. இதில் விராட் கோலி அதிகபட்சமாக 117 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர்.

உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் – பரபரப்பை கிளப்பி ரேகா போஜ்!

பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதன் பிறகு வில்லியம்சன் 69 ரன்களிலும், மிட்செல் 134 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மேக்ஸ்வெல், ஸ்டார்க்கை களமிறக்கிய ஆஸ்திரேலியா – இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா?

பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை பழி வாங்க காத்திருக்கும் டீம் இந்தியா, இது நடந்தால் மட்டுமே சாத்தியம்!

இந்த நிலையில், இந்தப் போட்டியில் தனது 49 சதங்கள் சாதனையை முறியடித்த விராட் கோலியை கட்டியணைத்து சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். விராட் கோலி குறித்து சச்சின் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன் முதலில் சந்தித்தபோது, ​​மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட் வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

சாவு பயத்தை காட்டிட்டாங்களே பரமா மூவ்மெண்ட் - ஷமி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு!

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்கப் போகிறது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ய, எனது சொந்த மைதானத்தில் அழகுக்கு அழகு சேர்ப்பது போன்று அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…