MPL 2023: ரூ.14.8 கோடிக்கு வாங்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்; புனே அணிக்கு கேப்டனாக நியமனம்!
மகாராஷ்டிரா பிரீமியர் லீக் எனப்படும் எம்பிஎல் தொடரின் புனே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 16ஆவது சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்து டிஎன்பிஎல், எம்பிஎல் என்று அடுத்த தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில், மகாராஷ்டிரா பிரீமியர் லீக் எனப்படும் எம்பில் தொடரின் புனே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதெல்லாம் திடீரென்று நிகழ்ந்த சம்பவம்: முகமது கைஃப் பெருமிதம்!
இந்த எம்பிஎல் தொடரில், புனே, கோலாப்பூர், நாசிக், சம்பாஜிநகர், ரத்னகிரி, சோலாப்பூர் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில், புனே அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். கோலாப்பூர் அணிக்கு கேதர் ஜாதவ், நாசிக் அணிக்கு ராகுல் திரிபாதி, சம்பாஜிநகர் அணிக்கு ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரத்னகிரி அணிக்கு அசிம் காசி மற்றும் சோலாப்பூர் அணிக்கு விக்கி ஓஸ்ட்வால் ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்: வைரலாகும் வீடியோ!
இந்தப் போட்டி புனேயி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹித் பவார் கூறியிருப்பதாவது: அணிகளுக்கான உரிமையாளர் ஏலத்தில் கிரிக்கெட் சங்கத்திற்கு 20க்கும் அதிகமான நிறுவனங்களிடமிருந்து மனுக்கள் வந்துள்ளது. இந்த 6 அணிகளின் விற்பனை மூலமாக ரூ.18 கோடி வரையில் கிரிக்கெட் சங்கம் எதிர்பார்த்ததாகவும், ஆனால், அதைவிட 3 மடங்கு அதிகம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நார்வே சர்வதேச செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திய குகேஷிற்கு முதல்வர் பாராட்டு!
மேலும், இந்த 6 எம்பிஎல் அணிகள் ஒவ்வொன்றிற்கும் 3 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி வரையில் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளோம். இன்று 6 அணிகளுக்கான ஏலம் விடப்பட்ட நிலையில், ரூ.57.80 கோடி வரையில் பெற்றுள்ளோம். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி ரசிகர்கள் பார்க்கும்படியாகவும், டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆன்லைன் மூலமாக போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் சிவம் லோககரே!
புனே அணியின் உரிமையை பிரவின் மசலேவாலே கைப்பற்றினார். இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக புனே அணி ரூ.14.8 கோடி வரையில் செலவு செய்துள்ளது. இதே போன்று கேதர் ஜாதவ்விற்கு ரூ.11 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு ரூ.8.7 கோடி சம்பளத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 6 அணிக்கான வீரர்களுக்கான ஏலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.