இதெல்லாம் திடீரென்று நிகழ்ந்த சம்பவம்: முகமது கைஃப் பெருமிதம்!
குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது. இந்த தொடர் முடிந்த பிறகு எம்.எஸ்.தோனி தனது முழங்கால் வலிக்கு மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்: வைரலாகும் வீடியோ!
இதையடுத்து வீடு திரும்பிய தோனியை, இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விமான நிலையத்தில் வைத்து சந்தித்த தருணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நார்வே சர்வதேச செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திய குகேஷிற்கு முதல்வர் பாராட்டு!
அதில், அவர் கூறியிருப்பதாவது: முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் குடும்பத்தோடு வீடு திரும்பினார். அவரை விமான நிலையத்தில் சந்தித்தது மகிழ்ச்சி. எனது மகன் தோனியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அவன் கால்பந்து விளையாடுவான். தோனி கூட சிறு வயதில் கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்ததாக கூறினார். அடுத்த சீசன் சாம்பியன் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் சிவம் லோககரே!