நார்வே சர்வதேச செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திய குகேஷிற்கு முதல்வர் பாராட்டு!
நார்வே சர்வதேச செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சனை இந்திய வீரர் குகேஷ் வீழ்த்தியதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடந்து வருகிறது. இதில், உலக சாம்பியன் கார்ல்சன், இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த செஸ் போட்டியின் தரவரிசையை நிர்ணயம் செய்ய பிளிட்ஸ் முறைப்படி போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் சிவம் லோககரே!
இந்தப் போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்து நாட்டின் அனிஷ் கிரியை வீழ்த்தினார். 2ஆவது சுற்றுப் போட்டியில் இவர் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி உலக தரவரிசைப் பட்டியலில் வேகமாக முன்னேறி 15ஆவது இடம் பிடித்தார். அதோடு லைவ் ரேட்டிங்கில் குகேஷ் 2739 புள்ளிகள் பெற்றுள்ளார்.
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், தவறான தகவலை பரப்பாதீர்கள்: சாக்ஷி மாலிக்!
இந்த நிலையில் உலக சாம்பியனை வீழ்த்திய குகேஷிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி கடினமான ஆட்டத்தின் மூலமாக 2739 ரேட்டிங் பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் உயரத்திற்குச் சென்று, இந்தியாவின் சதுரங்கத் தலைநகரான சென்னையைப் பெருமைப்படுத்துவதைத் தொடர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.