IPL 2023: ருதுராஜ், கான்வே அதிரடி அரைசதம்! ஜடேஜா செம ஃபினிஷிங்.. DC-க்கு கடின இலக்கை நிர்ணயித்தது சிஎஸ்கே
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 223 ரன்களை குவித்து, 224 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. 15 புள்ளிகளை பெற்றுள்ள சிஎஸ்கே அணி, பிளே ஆஃபிற்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது.
டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
IPL 2023: தோனி 8ம் வரிசையில் இறங்குவது ஏன்..? உண்மையை உடைத்த மைக் ஹசி
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், ரைலீ ரூசோ, யஷ் துல், அமான் கான், அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 14.3 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 141 ரன்களை குவித்து கொடுத்தனர். 50 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து ருதுராஜ் ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டார்.
அதன்பின்னர் டெவான் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபே, 9 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி 52 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்த டெவான் கான்வேவும் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழக்க, ஜடேஜா 7 பந்தில் 20 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 223 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 224 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை டெல்லிக்கு நிர்ணயித்தது.