IPL 2023: ஐபிஎல்லில் அசத்திய இந்த 3 வீரர்களையும் ODI உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கணும் - ரவி சாஸ்திரி
ஐபிஎல் 16வது சீசனில் அபாரமாக ஆடி அசத்திய 3 இளம் வீரர்களை ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறியது. எஞ்சிய 3 இடங்களூக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.
இந்த சீசனில் திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகிய இளம் வீரர்கள் அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். திலக் வர்மா மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் அபாரமாக ஆடி அசத்திவருகிறார். ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி அசாத்தியமான வெற்றியை கேகேஆருக்கு பெற்று கொடுத்து தன்னை ஒரு ஃபினிஷராக நிரூபித்ததுடன், அதன்பின்னரும் பல போட்டிகளில் கடைசி ஓவரில் அபாரமாக ஆடி த்ரில் வெற்றிகளை பெற்று கொடுத்து ஃபினிஷராக நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த சீசனில் ஒரு சதம் உட்பட 13 போட்டிகளில் மொத்தமாக 575 ரன்களை குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் ஆர்டரில் அசத்திவருகிறார்.
ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ள நிலையில், ஐபிஎல்லில் அபாரமாக ஆடிவரும் 3 வீரர்களை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள ரவி சாஸ்திரி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அருமையாக ஆடுகிறார். இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்வேறு விதங்களில் வளர்ந்துள்ளார். மற்றொருவர் ரிங்கு சிங். ரிங்கு சிங்கின் நிதானமும் மனவலிமையும் என்னை வியப்படைய செய்கிறது. கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற பசியும் வேட்கையும் ரிங்குவிடம் அதிகமுள்ளது.
ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்
மேலும் இடது கை பேட்ஸ்மேன்களான சாய் சுதர்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் உள்ளனர். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வல, ரிங்கு சிங் தான் எனது டாப் 2 ஆப்சன். 3வது வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இவர்கள் மூவரையும் ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.