IPL 2023; கடைசி வாய்ப்பு.. வெற்றி கட்டாயத்தில் ராஜஸ்தான்-பஞ்சாப் பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறீயுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தலா 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. இருந்தாலும் பின்புற வாய்ப்பு ஒன்று இருக்கிறது. குறைந்தபட்சம் அதையாவது தக்கவைக்க, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்
தர்மசாலாவில் இன்றிரவு நடக்கும் போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், நேதன் எல்லிஸ், ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்.
IPL 2023: பஞ்சாப்பின் உத்தி சரியானதுதான்.. ஆனால் ரொம்ப லேட்டா பண்ணிட்டாங்க..! சேவாக் அதிரடி
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோ ரூட், தேவ்தத் படிக்கல், த்ருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.