ரொம்ப பெரிய பிளான்லாம் போடல; சிம்பிள் பிளான் போட்டு சிஎஸ்கேவை காலி பண்ணிட்டோம் - சஞ்சு சாம்சன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதற்கு பெரிய பிளான் எல்லாம் போடவில்லை, சிம்பிளான பிளான் போட்டு சிஎஸ்கேவை காலி செய்துவிட்டோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 37ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர் ஆர் அணி முதலில் பேட்டிங் தேர்வ் செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்துக் கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் துருவ் ஜூரெல் 34 ரன்கள், படிக்கல் 27 ரன்கள் நாட் அவுட் என்று ரன்கள் சேர்க்க இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
யுவராஜ் சிங்கை விட சிக்ஸ் அடிப்பது முதல் எல்லாவற்றிலும் ஷிவம் துபே சிறந்தவர் - கொண்டாடும் ரசிகர்கள்!
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷிவம் துபே மட்டும் அரைசதம் அடித்துக் கொடுத்தார். ருத்துராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா மற்றும் மொயீன் அலி இருவரும் தலா 23 ரன்கள் எடுக்க கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதற்கு முன்னதாக தனது ஹோம் மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு புள்ளிபட்டியலில் 2ஆவது இடத்திலிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய சஞ்சு சாம்சன் கூறியிருப்பதாவது: இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது விருப்பம். அதுவும், இது எங்களது ஹோம் மைதானம் என்பதால் இந்த வெற்றி எங்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. அதோடு இது ஒன்றும் சின்னச்சாமி, வான்கடே மைதானம் போன்று கிடையாது. ஏனென்றால், அந்த மைதாங்களில் சேஷிங் செய்யலாம். இந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடினால் சேஷிங் செய்வது கடினம். அதனால், டாஸ் ஜெயிச்சு இந்த வெற்றியை பதிவும் செய்தோம். அணியின் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரை பதித்த ராஜஸ்தான்; 2ஆவது முறையாக சென்னையை வீழ்த்தி சாதனை!
இனி சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் போட்டி இல்லை. வரும் 30 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று வரும் 30 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.