யுவராஜ் சிங்கை விட சிக்ஸ் அடிப்பது முதல் எல்லாவற்றிலும் ஷிவம் துபே சிறந்தவர் - கொண்டாடும் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கை விட ஷிவம் துபே சிறந்தவர் என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கபட்ட அந்த அணிக்காக விளையாடியவர் ஷிவம் துபே. ஆனால், அந்த அணியில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அவரை ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த அணியிலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாத நிலையில், கடந்த ஆண்டு சென்னை அணி அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த ஆண்டும் அவரை தக்க வைத்தது.
இந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.4 கோடிக்கு இடம் பெற்ற ஷிவம் துபே, மொத்தமாக 236 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 10 பவுண்டரிகளும், 19 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். சிக்ஸர் அடிப்பதில் சிறந்தவராக திகழ்கிறார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரை பதித்த ராஜஸ்தான்; 2ஆவது முறையாக சென்னையை வீழ்த்தி சாதனை!
இவ்வளவு ஏன், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். டெவான் கான்வே 8 ரன்னில் வெளியேறினார். ரஹானே 15, ராயுடு 0 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது தான் ஷிவம் துபே களமிறங்கினார். அவர் தனது பங்கிற்கு அதிரடியாக ஆடி இந்த ஐபிஎல் சீசனில் 3ஆவது முறையாக தொடர்ந்து அரைசதம் அடித்துள்ளார். 33 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 52 ரன்கள் குவித்துள்ளார்.
எனினும், இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ஷிவம் துபே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கை விட சிறந்தவர் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய யுவராஜ் சிங், 1900 ரன்களும், 304 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்களும், 58 டி20 போட்டிகளில் விளையாடி 1177 ரன்களும் எடுத்துள்ளார்.
தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவை விட ஷிவம் துபே அதிக ரன்கள் குவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளனர். 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 181 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.