15 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரை பதித்த ராஜஸ்தான்; 2ஆவது முறையாக சென்னையை வீழ்த்தி சாதனை!
ஜெய்ப்பூரில் தனது சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 37ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர் ஆர் அணி முதலில் பேட்டிங் தேர்வ் செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்துக் கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் துருவ் ஜூரெல் 34 ரன்கள், படிக்கல் 27 ரன்கள் நாட் அவுட் என்று ரன்கள் சேர்க்க இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
தனது 200ஆவது போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களுரு அணிக்கு எதிராக ஒரு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சென்னையின் பேட்டிங் பலத்திற்கு 200 ரன்கள் எல்லாம் ஜூஜூபி ஸ்கோராக இருந்தாலும், நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறியது. டெவான் கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடிக்கு பெயர் போன ருத்துராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே 15, இம்பேக்ட் பிளேயராக வந்த ராயுடு 0 என்று நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஒரு புறம் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த ஷிவம் துபே, இந்த சீசனில் தொடர்ந்து 3 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த ஜடேஜா மற்றும் மொயீன் அலி இருவரும் தங்களது பங்கிற்கு போராட, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் பந்து வீச்சில் தட்டு தடுமாறினர். அவர்கள் கடைசியில் அதிகளவில் சிக்ஸர்கள் அடிக்கவில்லை. ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
மொயீன் அலி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 23 ரன் எடுத்து களத்தில் இருந்தார். கடைசி வரை தோனி களமிறங்கவில்லை. இவரது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
இதற்கு முன்னதாக தனது ஹோம் மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு புள்ளிபட்டியலில் 2ஆவது இடத்திலிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
இரு அணிகளும் கடைசியாக மோதிக் கொண்ட 7 போட்டிகளில் 6 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இவ்வளவு ஏன், கடந்த 2019 ஆம் ஆண்டு வரை மோதிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், அதன் பிறகு சென்னை 15 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வெற்றிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சென்னைக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த 2ஆவது அணி என்ற சாதனையையும் ராஜஸ்தான் ராயல்ஸ் (13) அணி படைத்துள்ளது. முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் (20) அணி இடம் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் (12) உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
இனி சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் போட்டி இல்லை. வரும் 30 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று வரும் 30 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.