India vs Pakistan: டாஸ் ஜெயிச்சு தவறான முடிவு எடுத்த ரோகித் சர்மா – அடுத்தடுத்து காலியான விக்கெட்டுகள்!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று தொடங்கிய 3ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்துள்ளார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Asia Cup 2023: மழை இந்தியாவிற்கு சாதகமா? பாதகமா? மழையால் மீண்டும் போட்டி நிறுத்தம்!
இதற்கு முக்கிய காரணம் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 2ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடி 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India vs Pakistan: வெளியே, உள்ளே போட்டு ரோகித் சர்மாவை கிளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி!
அதே போன்று தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா டாஸ் ஜெயிச்சு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி இருக்கிறார்கள். ஆதலால், இந்திய அணி பேட்டிங் விளையாடி அதிக ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அஃப்ரிடியின் வேகத்தில் ரோகித் சர்மா 11 ரன்கள் மற்றும் விராட் கோலி 4 ரன்கள் இருவரும் ஆட்டமிழந்தனர்.
India vs Pakistan: விளையாட ஆரம்பித்த மழை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு!
இவர்களைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்கள், நிதானமாக விளையாடி வந்த நிலையில், ஹரீஷ் ராஃபின் ஷாட் பிட்ச் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு 32 பந்துகள் வரையில் விளையாடிய சுப்மன் கில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில், 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 5ஆவதாக களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து வருகின்றனர். தற்போது வரையில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.